இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்க அழைப்பு

321 0

airforce_CIஇலங்கையின் படையினருக்கு பயிற்சிகளை வழங்க பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த பயிற்சிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அமெரிக்கா உட்பட்ட நாடுகளில் இலங்கை படையினருக்கு பயிற்சிகளை பெற முடியாத நிலை இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் தனியாருக்குச் சொந்தமான 153 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் விடுவிக்கப்பட முடியாத காணிகளுக்கு பதிலாக நட்டஈடு வழங்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

யாழ்;ப்பாணத்தில் 32 வீதமான படை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நிலமைகளை கருத்தில் கொண்டு உடனடியாக படையினரை விலக்கிக் கொள்ள முடியாது.

இந்த விடயத்தில் தாம் வடக்கு முதலமைச்சரின் கருத்துகளுக்கு தாம் உடன்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் அரசியல் வாதிகளின் இலக்குகளுக்காக அன்றி பொதுமக்களுக்காகவே சேவையாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சு என்பது அரசியல் அற்ற அமைப்பு என்ற வகையில் நாட்டின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தாம் உறுதியாக இருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளா