செங்கோலை தொட்டால் 8 வாரங்களுக்கு அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

940 0

நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது செங்கோலை தொட்டாலோ, அதனை தூக்கினாலோ, எட்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவை மத்தியில் செங்கோல் வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை தொட்டும், தூக்கியும் கடும் ஒழுக்க விரோத செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த குற்றத்தை நாடாளுமன்ற உறுப்பினர் முதல் முறையாக செய்தாலும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என புதிய நாடாளுமன்ற கட்டளைச்சட்டம் தொடர்பான இறுதி வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவையில் தொடர்ந்தும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கட்டளைச்சட்டத்தை மீறினால், நேரடி ஒளிப்பரப்பை இடைநிறுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment