உத்தேச கீரிமலை மீன்பிடி துறைமுகம் – பேச்சுவார்த்தை நடத்தப்படும்

373 0

c.v.wigneswaran165dfdxx7உத்தேச, யாழ்ப்பாணம் – கீரிமலை மீன்பிடி துறைமுக அமைவிடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த மீன்பிடித்துறை முகம், புனிதபூமியான கீரிமலையில் அமைக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்று, வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தி இருந்தார்.

இது தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கருத்து தெரிவிக்கையில் இந்த துறைமுகத்தின் அமைவிடம் குறித்து சிக்கல் இருப்பதாகவும், அதனை மீளாய்வு செய்து குறித்த துறைமுகம் நிர்மாணிக்கப்படும என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த துறைமுகம் தொடர்பில் மத்திய மீன்பிடித்துறை அமைச்சருக்கும், வடமாகாண ஆளுனருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக, வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழக மற்றும் வடமாகாண மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பில் இடம்பெறுகின்ற இந்த கலந்துரையாடலில், இது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.