முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைகவசத்துக்கு தடைவிதிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முழுகத்தை முழுமையாக மூடும் தலைகசத்தை தடை செய்யும் சட்டம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி அமுலாக்குவதற்கு காவற்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் இதற்கு எதிராக இரண்டு பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில, இந்தசட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய விசாரணையின் போதும், இந்த தடையுத்தவை எதிர்வரும் நொவம்பர் மாதம் 17ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்தது.