இலங்கைத் தமிழர் ஒருவர் கனடாவில் சிறை தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிங்கநாதன் மகேந்திரராஜா என்ற அவருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிறுவர் ஒருவரை பலவந்தமாக தடுத்து வைத்தமை, ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பலவந்தமாக தடுத்து வைத்திருந்தமை, இரண்டு தாக்குதல் சம்பவங்கள், இரண்டு சட்டவிரோத ஆயுதப் பயன்படுத்தல் உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு குறித்த தீர்ப்பு நாளையதினம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.