அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் அலுவலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமான முறையில் படகில் பயணித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பின்னர், அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே ஈழ ஏதிலிகள் அவுஸ்திரேலியா செல்கின்றனர்.
எனினும் ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.