தான் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மனுவை ஆராய்ந்த பிரதம நீதியரசர் பியசாத் டெப் தலைமையிலான நீதியரசர்கள் அமர்வு இன்று (15) மனுவை ஒக்டோபர் 24 ஆம் திகதி விசாரிப்பதாக அறிவித்துள்ளனர்.
மிக் விமான கொள்வனவு உட்பட சில சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்ய தயாராகி வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்தி உத்தரவிடுமாறு கோத்தபாய இதற்கு முன்னரும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு அமைய கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
இந்த தடையுத்தரவானது வழக்கு விசாரணை முடியும் வரை அமுலில் இருக்கும் என பிரதம நீதியரசர் பியசாத் டெப் தலைமையிலான நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.