செல்பி படங்களை எடுக்கச் சென்று பலர் உயரிழந்த சம்பவங்கள் அண்மையில் நாடு பூராகவும் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் செல்பி எடுப்பவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மற்றவர்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்த்து நாள் ஒன்றுக்கு 3 செல்பி படங்களுக்கு மேல் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுதல் சில நேரங்களில் அசாதாரண மன குழப்பங்களை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்பி படங்களை எடுத்து தன்னை விட அதனை ரசிப்பது பின்னர் அவ்வாறு படங்களை எடுத்து அடிமையாகுகின்றனர்.
சிலர் தாம் எடுக்கும் படங்களில் அழகு போன்ற விடயங்கள் குறைந்தால் மன அளுத்தங்களுக்கு உள்ளாகுவதாக சிரேஸ்ட மனநல மருத்துவ ஆலோசகர் மருத்துவர் கமல் எஸ் ஜயசேகர தெரிவித்துள்ளார்..