கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் குண்டர் சட்டமா? – கண்டனக் கூட்டம்

29448 0

தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கண்டனக் கூட்டம் 10-6-2017 அன்று அசோக் நகர் அம்பேத்கர் திடலில் ”அடக்குமுறைக்கு எதிரான குடிமைச் சமூகம்” ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இனப்படுகொலை நினைவேந்தலை தடுக்க முயன்றதற்கு எதிராக, தமிழீழ இனப்படுகொலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகவும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தினில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், தோழர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் ஜவாஹிருல்லா, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, பேராசிரியர் அ.மார்க்ஸ்,இயக்குநர்கள் தோழர் கரு.பழனியப்பன், தோழர் கவிதா பாரதி, தோழர் தாமிரா, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் தோழர் சந்திரா, ஆவணப்பட இயக்குநர் தோழர் அமுதன்,எழுத்தாளர்கள் தோழர் ஆழி செந்தில்நாதன், தோழர் தமிழ்க் கனல் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்வில் பல்வேறு பத்திரிக்கையாளர்களும், படைப்பாளிகளும், தமிழ் உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர்.