சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்த வாரம் தென்கொரியா பயணமாகவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தென்கொரியா புறப்படவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பயணத்துக்கான காரணம் எதனையும் அந்த ஊடகம் வெளியிடவில்லை.
மகிந்த ராஜபக்ஷ பதவியிழந்தபின்னர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.
அண்மையில் ஜப்பான் மற்றும் உகண்டா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.