உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் வெகுசனத் தொடர்புத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹன லக் ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
தற்கொலைக்கு உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்களே காரணம் எனவும் இதனை நிவர்த்தி செய்வதற்கு யோகா சிறந்ததொரு கலை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,இன்று எமது நாட்டில் வாழும் உயர் மட்ட மக்களிடம் மன அழுத்தங்கள் காணப்பட்டாலும் அதனை நிவர்த்திசெய்ய அவர்கள் பல வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.ஆனால், மந்திய மற்றும் கீழ் வர்க்க மட்டங்களில் உள்ளவர்களுக்கு அவ்வாறான வசதி வாய்ப்புக்கள் அமைவதில்லை. அவர்கள் தற்கொலையையே நாடுகின்றனர்.
இதன் ஓர் விளைவாகவே உலகிலே தற்கொலை செய்துகொள்ளும் முதல் ஐந்து நாடுகளுக்குள்ளும் இலங்கையும் அடங்கியுள்ளது.இவ்வாறான மன அழுத்தங்களை போக்கி மனதையும் உடலையும் சம நிலைப்படுத்தி ஆரோக்கியமான ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்கு யோகா உடற் பயிற்சி முறை மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
எனவே, அனைவரும் யோகாசனப் பயிற்சியைப் பெறவேண்டுமெனவும், இதனால் உடலையும் உள்ளத்தையும் எமது கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.