இஸ்ரேல் எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேனுக்கு புக்கர் பரிசு

413 0

இலக்கிய உலகின் முன்னணி பரிசுகளில் ஒன்றான மான் புக்கர் சர்வதேச பரிசை இஸ்ரேல் எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேன் வென்றுள்ளார்.

சர்வதேச அளவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருது ‘மான் புக்கர் பரிசு’ ஆகும். ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள நாவலுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த உயரிய விருதுக்கு இஸ்ரேலிய எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டேவிட் கிராஸ்மேன் எழுதிய ‘ஏ ஹார்ஸ் வாக்ஸ் இன்டு ய பார்’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புக்கர் பரிசுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் இஸ்ரேலின் டேவிட் கிராஸ்மேன், அமாஸ் ஓஸ் உள்ளிட்ட 6 பேரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில், டேவிட் கிராஸ்மேனின் ‘ஏ ஹார்ஸ் வாக்ஸ் இன்டு ய பார்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தோல்வியடையும் நகைச்சுவை பேச்சாளரின் இறுதி செயல்திறனைப் பற்றிய நாவல் இது.

புக்கர் பரிசானது 50 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளை உள்ளடக்கியது. இந்த பரிசுத் தொகை, எழுத்தாளர் டேவிட் கிராஸ்மேன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜெசிகா சோகன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கின் ‘தி வெஜிடேரியன்’ எனும் நாவலுக்காக வழங்கப்பட்டது.

Leave a comment