ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் வெளிநடப்பு

360 0
வடக்கு மாகாண சபையின் 96 வது விசேட அமர்வு இன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கெதிராக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில் வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன்.தனது தன்னிலை விளக்கத்தினை சபையில் அறிவித்த நிலையில். எதிர்க்கட்சி தலைவர் தான் இந்த தன்னிலை விளக்கம் தொடர்பாக கருத்து கூற முட்பட்ட போது சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இந்த சபையில் இன்றைய சபையின் வழி நடத்தல் குழுவின் பரிந்துரையின் படி தன்னிலை விளக்கத்தின் பின்னர் முதலமைச்சர் விரும்பினால் ஏதும் கருத்து கூறலாம் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்ததை அடுத்து எதிர்கட்சி தலைவர் தனது ஐனநாயக உரிமை மறுக்கப்படுகின்றது என சபையில் தெரிவித்து தான் வெளியேறுவதாக தெரிவித்து வெளியேறினார்.
இதனையடுத்து முதலமைச்சர் உரையாற்ற ஆரம்பித்த போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 12 பேரும் சபையினை விட்டு  வெளியேறியதோடு ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேறினர் எனினும் முதலமைச்சர் தனது உரையினை தொடர்ந்தார்.

Leave a comment