வடக்கு மாகாண சபையின் 96 வது விசேட அமர்வில் முதலமைச்சர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாண அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென ஏற்கனவே 16 உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தினர் ஆனால் நான் காரணமில்லாது மாற்ற முடியாமல் இருந்தது.ஆனால் இந்த விசாரணை அறிக்கை இதற்கு வழிவகுத்துள்ளது.அமைச்சர்கள் செய்தது சரியா பிழையா என்பதற்கு அப்பால் மக்கள் மத்தியில் அமைச்சரவையில் மாற்றம் ஒன்றை எதிர்பார்ப்பதை நான் உணர்கிறேன்.எனக்கு தற்போது அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கருதுகிறேன்.
மக்களுடைய எதிர்பார்ப்பும் இதுவாக இருக்கும் என நான் கருதுகிறேன் இதற்கு பிறகும் அமைச்சரவையில் மாற்றம் இல்லையாயின் மக்களின் எதிர்ப்பலைகளைசம்பாதிக்க வேண்டி வரும் என தெரிவித்த முதலமைச்சர்.மேலும் கருத்து தெரிவிக்கையில் என்சார்பாக ஒரு அமைச்சர் செயற்படுகிறார் அவரை மாற்ற வேண்டும் என பலர் பிரியத்தனம் மேற்கொண்டு கடைசியில் தங்களது ஒருவரையும் பதவி விலக வைத்து விட்டது விசாரணை குழு எனவும் முதலமைச்சர் சபையில் உரையாற்றினார்.