அமெரிக்கா இலங்கைக்கு வருடாந்தம் வழங்குகின்ற உதவித் தொகையை குறைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம் சரியானது என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கான ஒதுக்கத்தை அமெரிக்காவின் ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் குறைத்துள்ளார்.
இதன்படி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் வருடாந்த உதவிகளும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கு அமெரிக்காவின் செனட் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், அமெரிக்காவை முதன்மைப் படுத்தும் டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தின்படி, இந்த உதவிக் குறைப்பு சரியானதே என்று ரெக்ஸ் தில்லர்சன் கூறியுள்ளார்.