தற்போது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் ஊடாக, நாட்டில் ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒருங்கிணைவு ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் இடம்பெறும் 12வது உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் இந்த அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக குறுகிய நோக்குடைய மற்றும் பாகுபாடுடைய அரசியல் இல்லாமல் போய் இருக்கிறது.
எனவே நீண்டகாலமாக நிலவும் பல்வேறு பிரச்சினைகளை இதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
அத்துடன் பொருளாதார நிலைப்பெறு தன்மையையும் ஏற்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.