சனிக்கிழமை அன்று தோர்பென்ஸ் வட்டத்திலுள்ள ஸஃபால்க் கிராமத்தின் கடலின் மேலே நீர் சுழன்று எழும்பி ஏற்பட்ட நீர்தாரை ஆச்சரியமூட்டும் காட்சியை வழங்கியது.
காற்று சுழன்று வீசி சூறாவளி ஏற்படுவது போன்று நீர் சுழன்று மேலெழுவது தான் நீர்தாரை. இதனை தோர்பனெஸ் மற்றும் அல்டிபர்க்கை சுற்றிய கடற்கரையில் இவ்வாறு சுழன்று எழுவதை பார்க்க முடிந்தது.
லெஸ்டனை சேர்ந்த ஜாக்கி பட்லர் சிஸ்வெல் கடற்கரையில் தன்னுடைய செல்ல நாய் குட்டியோடு நடந்தபோது இதனை கண்டு அதிசயித்து போனார்.
நீர்தாரை என்பது ஒரு சூறாவளிதான். ஆனால், அது நீர் மேல் அடிக்கின்ற சூறாவளி என்று பிபிசி வானிலை கணிப்பாளர் டான் கோலே தெரிவத்திருக்கிறார்.
இரண்டுமே காற்றின் சுழலில் தான் தொடங்குகிறது. அந்த காற்றின் சுழல் தரையை நோக்கி மோதினால், அது சூறாவளி, நீரில் மோதினால் நீர்தாரை.
சனிக்கிழமையன்று, வடமேற்கு திசையில் நிலப்பகுதியில் வீசிய காற்று, வடகடல் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதியில் வீசிய கடல் காற்றில் இணைந்தது.
காற்றின் இந்த சுழலின்போது வேறுபட்ட துருவங்கள் சந்திக்கிறபோது, காற்று வேகமாக மேலெழும்பி மழையை உருவாக்கலாம். சில நேரங்களில், சுழல் மேகங்களையும் உருவாக்கும்