பொதுவாக பெரும்பாலான பிரதேசங்களில் வெள்ள நிலைமை குறைவடைந்திருப்பதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மணித்தியாலங்களில் மழை குறைவடைந்திருப்பதாகவும், நதிகளுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், நதிகளை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விசேடமாக ஜின்கங்கை, களுகங்கை மற்றும் நில்வள கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற வேண்டுமென்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல் திணைக்களம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.