புத்தமதத்தை கண்­டு­கொள்­ளாதி­ருப்­பதே ஏற்பட்டுள்ள அனர்த்­தங்களுக்கு காரணமாம்-கல­கொட

359 0

நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

நாட்டில் தற்­போது அதர்ம ஆட்சி நில­வு­கின்­றது அத­னால்தான் இவ்­வா­றான அனர்த்­தங்கள் இடம்­பெ­று­கின்­றன. எனவே போலி தெய்­வங்­க­ளிடம்  குறை­களை கூறாமல் அனர்த்தம் நேரக்­கூ­டாது என உண்மை தெய்­வ­மான புத்த பெரு­மானை பிரார்த்­தனை செய்ய வேண்டும் என்றும் நாட்டு மக்­களை கேட்­டுக்­கொண்­டுள்ளார்,.

வெள்ள அனர்த்தம் குறித்து  பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,  நாட்டில் பாரிய வெள்ள அனர்த்த நிலைமை ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. அதனால் 70 க்கும் மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதனால் வழமை போலவே எமது நாட்டில் ஒரு அனர்த்தம் இடம்­பெற்­ற­வுடன் சக­லரும் ஒன்று திரண்டு செயற்­ப­டு­வது போன்று இப்­போதும் எடுத்­துக்­காட்­டாக நடந்­து­கொள்ள வேண்டும்.

குறிப்­பாக இளை­ஞர்­களே அவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும். இதில், சிங்­க­ளவர் தமிழர் முஸ்­லிம்கள் என்ற பேத­மின்றி மக்கள் என்ற வகையில் சக­லரும் மனி­தா­பி­மா­னத்­துடன் செயற்­பட வேண்­டி­யது அவ­சி்­ய­மாகும். எனது பிரச்­சினை தற்­போதை தரு­ணத்தில் முக்­கி­ய­மில்லை. எனவே எதிர்ப்புச் செயற்­பா­டுளை விடுத்­து­விட்டு தற்­போ­தைய நிலை­மைக்கு உரிய செயற்­பாடு எதுவோ அதனை செய்ய வேண்டும்.

குறிப்­பாக பாதிக்­க­பட்ட மக்கள் புத்த பெரு­மான வேண்­டிக்­கொள்ள வேண்டும். அதனை விடுத்து போலி­யாக சிருஷ்­டிக்­கப்­பட்ட மற்­றைய தெய்­வங்­களை வணங்கி அவர்­க­ளி­டத்தில் குறை­களை கூறு­வதில் அர்த்­த­மில்லை.

அதனால் திருட்டு தெய்­வங்கள் இல்­லாமல் இந்த நாட்டை பாது­காத்த புத்த மதத்தின் தெய்­வங்­க­ளி­டத்தில் விளக்­கேற்றி உங்­களின் கவ­லையை கூறுங்கள். புத்த பூமியை பாது­காத்து தர வேண்­டுங்கள். இயற்கை அனர்த்­தங்­க­ளி­னாலும் வேறு செயற்­பா­டு­க­ளி­னாலும் மாற்றம் பெரு­கின்ற இந்த மூமியின் பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று வேண்­டுங்கள்,

அதேபோல் புத்­த­பெ­ரு­மானின் போத­னை­களை கேட்­கா­மலும் அவ­ருக்கு மதிப்­ப­ளிக்­கா­மலும் எமது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற  செயற்­பா­டுகள் தான் இவ்­வா­றான இயற்கை அனர்த்­தங்கள் நேர்­வ­தற்கு கார­ண­மாகும்.

அதனால் உண்­மை­யான தெய்­வத்­திடம் பிரார்த்­தனை செய்­யுங்கள். இதற்கு முன்பு இவ்­வா­றான அனர்த்தம் ஏற்­பட்­ட­தில்லை. ததி­டீ­ரென அனர்த்­தங்கள் நேரு­கின்­றன. இது குறி்த்து புத்த பெரு­மானும் போதித்துள்ளார். ஆட்சியாளர்கள் புத்த மதத்தினை பின்பற்றாமல் இருந்தால் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதனால் இன்று நாட்டில் உள்ள அதர்ம ஆட்சியே அனர்த்தத்திற்கு காரணம் என ஞானசாரர் தெரிவித்துள்ளார்.