இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில்

240 0

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

அதன்படி முதல் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இன்னொரு கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது குறித்து கவனம் செலுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.