இன மற்றும் மத ரீதியான கட்சிகளை தடை செய்யுமாறு கோரிய மனு தள்ளுபடி

383 0

Supreme_Court_Colomboஇன மற்றும் மத ரீதியான அடையாளங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் தாக்கல் செய்த இந்த மனுவை, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு நேற்று பரிசீலித்தது.

இந்த மனுவில் தேர்தல் ஆணையாளர், சட்ட மா அதிபர் மற்றும் 20 அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சி, சிறில்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் மகாசபை, சிலோன் மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

இன மற்றும் மத ரீதியாக கட்சிகள் அடையாளப்படுத்தப்படுவதால், பொது மக்களின் அடிப்படை உரிமகள் மீறப்படுவதாக குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.