ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வருட இறுதியில் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாருக்கான இலங்கை தூதுவர் டபிள்யு.எம். கருணாதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்டாரில் உள்ள இலங்கையைச் சேர்ந்தவர்களின் நலன் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் விரிவாக்கம் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தவுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கட்டாரின் மன்னர் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.