அமெரிக்காவின் ஜனநாயகட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனை பிசாசு என்று, குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
பிரசார மேடை ஒன்றில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அவரது குடியரசு கட்சியின் உறுப்பினர்களே டொனால்ட் ட்ரம்பிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக அதி துவேசமான கருத்துக்களை டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஹிலரி கிளின்டனையும் பிசாசு என்று வர்ணித்துள்ளார்.
இதேவேளை டொனால்ட் ட்ரம்பின் சொத்து – வரி விபரங்களை வெளியிடுமாறு, உலகின் தலைசிறந்த முதலீட்டார் என்று வர்ணிக்கப்படும் வொரன் பஃப்பட் சவால் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் ட்ரம், வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையிலேயே அவர் இந்த சவாலை விடுத்திருக்கிறார்.
வொரன் பஃபபட், ஹிலரி கிளின்டனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.