மன்னார் – திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணற்றை தோண்டும் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெற்றது.
இன்று கலை 8 மணிக்கு ஆரம்பமான முதற்கட்ட பணிகள் முற்பகல் 11 மணிக்கு நிறுத்தப்பட்டது.
இன்று குறித்த கிணறு 100 சென்றி மீற்றர் வரை தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இன்றையதினம் சந்தேகத்துக்கு இடமான பல் ஒன்றும், முட்கம்பி துண்டுகள், கற்கள் என்பனவும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்டுள்ள தடையப்பொருட்கள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போது வரை 10 அடுக்குகளாக குறித்த கிணறு தோண்டப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மாவட்ட சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரி டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் இந்த பணிகள் இடம்பெறுகின்றன.