கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்

351 0

கிரீஸ் நாட்டில் முன்னாள் அதிபர் லூகாஸ் பபாடேமோஸ் சென்ற காரில் குண்டு வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
கீரிஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நேற்று முன்னாள் அதிபர் லூகாஸ் பபாடேமோஸ் மற்றும் வங்கி அதிகாரிகள் இருவர் காரில் சென்று கொண்டிருந்தனர். திடீரென காரின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் லூகாஸ் மற்றும் அவரது ஓட்டுநர் ஆகியோரது காலில் காயம் ஏற்பட்டது.

குண்டு வெடிப்பு குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் லூகாஸ் மற்றும் வங்கி அதிகாரிகளை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. லூகாஸ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். மேலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஐ.எஸ் இயக்கத்தினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.