அரசுக்கு எதிராக தீவிரவாதம் மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதாக கூறி எகிப்து நாட்டில் முக்கிய ஊடக இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு எதிராக தீவிரவாதம் மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதாக கூறி எகிப்து நாட்டில் முக்கிய ஊடக இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
எகிப்து நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டதாக கூறி கத்தார் நாட்டின் அல்-ஜசீரா செய்தி தொலைக்காட்சி சேனல் உள்ளிட்ட பல ஊடக வலைதளங்களை எகிப்து அரசு முடக்கியது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தால் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு தடைசெய்யப்பட்ட முஸ்ஸிம் சகோதரத்துவ இயக்கத்துக்கு ஆதரவாக அல்-ஜசீரா தொலைக்காட்சி செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த செய்தி தொலைக்காட்சி முடக்கப்பட்டது. மேலும், புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வந்த “மதமஸர்’ என்னும் ஊடகமும் முடக்கப்பட்டது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக துருக்கியிலிருந்து செயல்பட்டு வரும் அல்-ஷார்க் வலைதளம் உள்ளிட்டஎகிப்தில் மொத்தம் 21 செய்தி வலைதளங்கள் முடக்கப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். எகிப்து அரசின் இந்த நடவடிக்கைக்கு ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.