தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.பெரியசாமி மறைவையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.பெரியசாமி இன்று காலை 7 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் மறைவெய்தினார்.
அவரது மறைவினையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.