இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளன.
குறிப்பாக இலகுவாக நியமிக்கப்படக்கூடிய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் கூட இன்னும் நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவற்றை அரசாங்கம் துரித கதியில் செய்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.