அதிகாரத்தில் இருந்த சிலர் தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற தாய்நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை ஜனாதிபதி நேற்று கென்பரா நகரில் வைத்து சந்தித்துள்ளார்.
இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
உண்மையை விடவும் பொய் வேகமாக பரவக்கூடியது.
எனவே அவ்வாறான பொய் பிரச்சாரங்களில் ஏமாற வேண்டாமெனவும் உலக வாழ் இலங்கையர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு அமர்த்திய இலங்கை மக்களின் எதிர்பார்ப்பை உயர்ந்தபட்சம் நிறைவேற்றுவதற்கு தாம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டு மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த தெளிவான அபிவிருத்தி திட்டங்களையும், அனைத்து மக்களிடமும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி, மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படாவண்ணம் நிலையான சமாதானத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.