மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பகிர்வின் ஊடாக அரசியல் அதிகாரத்தைப் பெற போராடுகின்றனர்.
மலையக மக்களுக்கும் அதே தேவை இருக்கின்ற போதும், நிர்வாக அதிகாரம் இல்லாத நிலையிலேயே இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
எனவே அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக மலையக மக்களுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், மலையகத் தமிழர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் என்று அந்தஸ்த்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது சனத்தொகைக் கணக்கெடுப்பிலும் இந்தியத் தமிழர் என்றே மலையக மக்கள் குறிப்பிடப்படுகின்றமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.