வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் குறித்து விவாதமொன்றைக் கோரியதால் சபையில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் குறித்த விவாதத்துக்கு தினமொன்றை ஒதுக்கித்தருமாறு கோரப்பட்டது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.
குரல் வடக்கு
இவ்வாறாக பர்ஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றபோதும், இன்றைய அமர்வில் குறித்த விவாதம் தொடர்பாக எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.