நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடனான காலநிலை இந்த மாத இறுதி வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஜிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களுகங்கை – எல்லை மற்றும் மில்லகந்த பிரதேசங்களிலும், களனி கங்கை ஹங்வெல்ல மற்றும் க்லேன்கோஸ் ஆகிய பிரதேசங்களிலும் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த பிரதேசத்தின் தாழ் நில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.