மன்னார் பொது மாயனத்திற்கு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் மக்கள் பாதிப்பு(காணொளி)

429 0

மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள, மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுப்பொருட்கள் இன்று காலை எரியூட்டப்பட்டமையினால் அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காணப்பட்டதோடு, அப்பகுதியில் உள்ள சுமார் 40 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் குப்பை எரியூ+ட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் மற்றும் மன்னார் நகர சபை அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னார் பௌஸர் மூலம் நீர் எடுத்துச்செல்லப்பட்டு தீயை அனைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் தொடர்ச்சியாக பல வருடங்கள் குறித்த பகுதியில் குப்பை எரியூட்டப்படுவதாகவும், இவ்விடயம் தொடர்பில் மன்னார் நகர சபை உட்பட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்ற போதும் எவ்வித மாற்று வடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக கழிவுப் பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் என அனைவரும் பாதீக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மன்கள் சுவாச நோய் மற்றும் தோல் நோய்க்கும் உள்ளாவதாகவும் மக்கள் கவலை அடைகின்றனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள கழிவுகளைத் தவிர, வைத்தியசாலை கழிவுப் பொருட்களும் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதாகவும், அதனால் சுவாசிப்பதற்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது காற்றுக்காலம் என்பதால் உயிரிழத்த உயிரினங்களை குப்பைகளுடன் போடுவதால் பாரிய துர்நாற்றம் வீசுவாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே எதிர்வரும் காலங்களில் மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் குப்பைகளை கொட்டி எரியூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த, மன்னார் நகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.