சீனாவின் நவீனப்பட்டுப்பாதை வேலைத்திட்டத்துக்கு ஒப்பான வேலைத்திட்டம் ஒன்றை, இலங்கையையும் உள்ளடக்கியதாக இந்தியா முன்னெடுக்கவுள்ளது.
இலங்கை உள்ளிட்ட 39 நாடுகளை ஒன்றிணைத்து, ‘மவுசம்’ என்ற வேலைத்திட்டத்தை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.
இந்தியாவின் மத்திய கலாசார அமைச்சர் மஹேஸ் சர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதில் சீனாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், இலங்கை, கம்போடியா, கட்டார் உள்ளிட்ட 39 நாடுகள் உள்ளடக்கப்படவுள்ளன.
குறித்த நாடுகளுடனான கடல்சார்ந்த உறவினை மீளாய்வு செய்த இந்த திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.