லிபியாவில் அமெரிக்காவின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

336 0

ee-415x260ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா லிபியாவில் மேற்கொள்ளும் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வான்படையினர் லிபியாவின் கரையோர நகரான ஷியட்டில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.
லிபிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த தாக்குதல்கள் இடம்பெறுவதாக பென்டகன் பேச்சாளர் பீட்டர் குக் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஹேஷ் காட்டரின் பரிந்துரைக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவரவாதிகளுக்கு லிபியா பாதுகாப்பு அமைவிடமாக இருந்து விடக்கூடாது என்பதில் ஒபாமா உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் எரிக் ச்சுல்ஸ் தெரிவித்துள்ளார்