நாட்டின் தேசிய தொழிற்துறையை உயர்த்த வேண்டும் – ஜனாதிபதி

325 0

mythiribala 6666sகடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதார பிரச்சினைகளின் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற இலங்கை பொருளாதார மாநாட்டின் அங்குரார்பன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாடு தற்போது 9000 மில்லியன் ரூபா கடன் சுமைகளை எதிர்கொண்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளிலிருந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு தற்போது 8 முதல் 10 சதவீத பங்களிப்பே கிடைக்க பெறுகின்றது.
அதனை 20 சதவீதமாக உயர்த்த முடியுமாயின் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேலும் பலமான நிலைக்கு கொண்டு வர முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடன் சுமைகள் இருந்து போதும் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் ஒரு போதும் நிறுத்தப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உதவிகளுக்காக செலவிடப்படும் நிதியை ஈட்டிக் கொள்வதற்காக உற்பத்திதுறையில் குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.