கூட்டு எதிர்கட்சியின் பேரணி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

325 0

mahinda_group_003-1கூட்டு எதிர்கட்சியின் ஐந்து நாள் பேரணி ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்ஹ ஜனாதிபதியுடன் கலந்துரையாடி கெம்பல் மைதானத்தை இறுதி கூட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்தார்.
இது தொடர்பான அனுமதியினை சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் பேரணியில் பங்கேற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக கையளித்தார்.
எனினும், மஹிந்த தரப்பினரின் பேரணி இறுதி கூட்டத்தை லிப்டன் சுற்று வட்டத்தில் நடத்தியது.
பல லட்சம் பேரை கொழும்பில் திரட்ட போவதாக கூச்சலிட்ட பேரணியினர் கெம்பல் மைதானத்தை நிரப்ப முடியாமை காரணமாகவே லிப்டன் சுற்றுவட்டத்தை தெரிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்த பேரணி ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அமைச்சர் சந்திம வீரக்கொடி, பேரணியில் பங்கேற்ற ஸ்ரீP லங்கா சுதந்திர கட்சியின் சிறிய குழுவினரால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை என குறிப்பிட்டார்.
எனினும், ஸ்ரீP லங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான இந்த பேரணியில் பங்கேற்றோர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தலைமை தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.