வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட புனித தலங்களின் புனரமைப்பு குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்ஹ அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பாக விளக்கமளித்தார்.
இதன்படி குறித்த புனரமைப்புக்களை புனித தலங்களின் பரிபாலன சபைகளிடம் கையளிப்பது தொடர்பாக அவர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, யுத்தத்திற்கு பின்னர் இராணுவ முகாம் பகுதிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வெடிப்பொருட்களை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தும் வகையில் குடிசன பகுதியற்ற பிரதேசம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் யோசனையின்படி அனுராதப்புரம் ஓயாமடுவ என்ற இடத்தில் இந்த களஞ்சியசாலை அமைக்கப்படவுள்ளதாக கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.