ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கான பயிற்சியளிப்பு மையம் ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு, பாதுகாப்பு படைத்தரப்பினால் இந்த பயிற்சியளிப்பு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 35 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன் இரண்டாம் கட்டமாக, 300 பேருக்கான தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமும் அமுலாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.