சவுதி அரேபியாவில் தொழில் தருனரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த குறித்தப் பெண், 2015ஆம் ஆண்டு இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவுதிக்கு சென்றுள்ளார்.
அவரது ஒப்பந்தக் காலம் நிறைவடைந்தப் பின்னரும் கடந்த 2 மாதங்களாக அவர் பலவந்தமாக தொழில் தருனரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது.
இதனை அடுத்த தூதரக அதிகாரிகள் தலையிட்டு அவரை விடுவித்துள்ளனர்.