சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக வன்முறைகளை அதிகளவில் புரிக்கின்றனர்.
குறிப்பாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், மேலும் இந்த வன்முறைகள் அதிகரிப்பதுடன், தண்டனைகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்கும் நிலைமையும் தொடரும்.
இந்த இரண்டையுமே இலங்கை மக்கள் 2015ஆம் ஆண்டு நிராகரித்திருந்தார்கள் என்று, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.