நாட்டின் அபிவிருத்திக்கு நல்லிணக்கமும் சமாதானமும் அவசியமானது என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக் கருவினை பாடசாலை கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் தொடர்பாக சமய பாட ஆசிரியர்கள், அறநெறி ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு நிரந்நதர சமாதானம் அவசியம் என்றும் நமது நாட்டில் சமய வெறியை கொண்டவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையாளராகNவு உள்ளார்கள்.
தமது சமயத்தின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொள்ளாதவர்களே சமய வெறியர்களாக நாட்டில் ஒருசிலர் காணப்படுகின்றனர். எனவே சமய அறநெறிப்பாடசாலைகள் சமய சொற்பொழிவாளர்கள், சமய பாட ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில், நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு, காருண்ணியம், தர்மம், ஆகியவற்றை மாணவர்களுக்கு இளம் வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பு மற்றும், நல்லிணக்கத்திற்கான தேசிய பிரகடன உறுதிபொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. சமயக்கல்வி ஊடாக இலங்கையில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்கத்தை உருவாக்கல் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு யாழ்ப்பாண வீரசிங்க மண்டபத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயம் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு யாழ்ப்பாண இந்திய துனைத் தூதுவர் ஆ.நடராஐன் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கலந்து கொண்டனார். அத்துடன் இன்றைய நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளர் மேகநாதன் சரஸ்வதி வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் எல். இளங்கோவன் சிரேஸ்ட அரச அலுவர்கள், ஆசிரியர்கள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.