இராணுவத்தின் மகளிர் படையணியில் சேவையாற்றிய ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பொரளை – கிங்ஸி வீதியில் அமைந்துள்ள இராணுவத்தின் மகளிர்படைத் தலைமையத்தின் சோதனைச் சாவடியில் கடந்த 21 ஆம் திகதி குறித்த பெண் சிப்பாய் தமது துப்பாக்கியால் தாமே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.