பெண் மருத்துவர் உடலமாக மீட்பு

239 0

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நுவரெலிய மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவரின் உடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை விடுதியில் இருந்து அவர் உடலமாக மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிக வலுவை கொண்ட ஊசி மருந்தை ஏற்றிக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உடலமாக மீட்கப்பட்டவர் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மருத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.