கிளிநொச்சி முறிப்பில் கடத்தப்பட்டதாக கருதப்படும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

265 0
கிளிநொச்சி முறிப்பு பகுதியைச்  சேர்ந்த 16வயது பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில் அயலவர்கள் கண்டு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறிப்பைச்  சேர்ந்த குறித்த சிறுமியை நேற்று முன்தினம்  கோணாவில் பகுதிக்கு கடத்திச் சென்று ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலாத்காரம் புரிந்திருக்கலாம் என்று கருதப்படும் சிறுமியே தற்போது அக்கராயன் பொலிசாரின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் நடாத்தியவேளையில் குறித்த இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதன் காரணமாக குறித்த இளைஞர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த விடயம் இன்றைய தினம் நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நீதவானின் உத்தரவின் பெயரில் சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையும் இணம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.