வித்தியா சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

346 0

கடந்த 2015 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியாவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்கு  விசாரணை இன்றைய தினம் யாழ் மேல் நீதி மன்றில்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.எதிரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை ரத்து செய்யப்பட்டதோடு எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.