வௌிநாடு செல்லத் தயாராகும் யோசித்த!

270 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித்த ராஜபக்ஷ வௌிநாடு செல்ல முன்வைத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இவருக்கு எதிராக நிதி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், யோசித்த வௌிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், தான் அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு செல்ல அனுமதியளிக்குமாறு சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் யோசித்த வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.