ருகுணு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அப் பல்கலைக்கழகத்தின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், நிலவும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, மனிதநேய மற்றும் நிதி முகாமைத்துவ பீடங்களை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய இரு பீடங்களிலும் உள்ள மாணவர்களை இன்று பல்கலைக்கழகத்தில் இருந்து வௌியேறுமாறும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.