கடந்த 7ஆம் மாதம் 29ஆம் திகதியன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நோபேட் பெனடிட் புஸ்பராசா தேவகி என்பவருடைய வீட்டிற்கு வந்த இராணுவத்தினர், வீட்டினுள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும் மீண்டும் புலிகள் இயக்கத்தினை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இவருடைய வீட்டினுள்ளும், தோட்டத்தினுள்ளும் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு எதுவுமே கண்டுபிடிக்கப்படாத நிலையில் மறுநாள் காலையில் மீண்டும் இவருடைய வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் அவருடைய மகன்களான அனோத்கிரதீஸ், புவிறீகன் ஆகிய இவருடைய புகைப்படங்களையும் காண்பித்து இவர்கள் பிரித்தானியாவில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை உருவாக்கும் சில அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றனர் எனவும் சிறீலங்கா அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி பல மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளனர்.
தேவகியின் கணவரான நோபேட் பெனடிட் புஸ்பராசா மற்றும் அவரது மகன் அனோத் கிரதீஸ் ஆகியோர் இரணைப்பாலையில் கடையொன்றில் வேலைசெய்துகொண்டிருக்கும்போது வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதோரால் 2014ஆம் ஆண்டு 4ம் மாதம் 11ஆம் திகதி கடத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.