புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விசேட ´ரயலட்பார்´ நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
இதன்படி குறித்த வழக்கினை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட ´ரயலட்பார்´ முறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன்படி குறித்த வழக்கினை விசாரிப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக குறித்த ரலட்பார் நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.